திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து துபாய், ஷார்ஜா, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, தோஹா உள்ளிட்ட முக்கிய நாடுகளுக்கும் சென்னை, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட பல உள்நாடுகளுக்கும் விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது. சர்வதேச நாடுகளில் இருந்து திருச்சி விமானநிலையம் வரும் பயணிகள், சட்டவிரோதமாக தங்கம் கடத்தி வருவதும் அதை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. , இந்நிலையில் ஷார்ஜாவில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு, சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில், துபாய் ஷாா்ஜாவிலிருந்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு வந்த, ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகளையும், அவரது உடைமைகளையும் மத்திய வான் நுண்ணறிவு பிரிவு, சுங்கத்துறை அதிகாரிகள் ஆகியோர் சோதனையிட்டனா்.அதில் சந்தேகத்திற்கிடமான ஒரு ஆண் பயணியை சோதித்ததில் 6ரூ.6.68 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 61 கிராம் எடையுள்ள தங்கத்தை பசையாக மாற்றி அவர் கடத்திவந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்தஅதிகாரிகள் தொடர்ந்து இதுகுறித்து அப்பயணியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.