பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி தொகுதி பங்கீடு தொடங்கியது. தீவிரமாக பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்கள் தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்து உள்ள கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்த முதல்கட்ட பேச்சுவார்த்தை நடந்து முடிந்து உள்ளது இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் விருப்ப மனுக்கள் பெறுவதற்கான விண்ணப்ப படிவம் கடந்த பிப்ரவரி 19ம் தேதி முதல் விநியோகிக்கப்பட்டு வந்தது.இந்நிலையில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பமுள்ளவர்கள் மார்ச் 1ம்தேதி முதல் 7 ம்தேதிக்குள் விருப்பமனுக்களை பூர்த்தி செய்து தலைமைக்கழகத்தில் சமர்பிக்குமாறு கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்திருந்தார். அதன்படி முதல் நாளான இன்று தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சரும் திமுக முதன்மை செயலாளருமான கே.என்.நேருவின் மகன் கே.என்.அருண் நேரு பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளித்துள்ளார். கடந்த சில வாரங்களாகவே அருண் நேரு திருச்சியில் போட்டியிடுவாரா? அல்லது பெரம்பலூரில் போட்டியிடுவாரா என கட்சியினர் சந்தேகத்தில் இருந்தனர். இந்நிலையில் இவர் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளித்துள்ளது கவனிக்கத்தக்கது. இந்நிகழ்வில் திருச்சி வடக்குமாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் மத்தியமாவட்ட செயலாளர் கே.வைரமணி சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்தரபாண்டியன் பழனியாண்டி ஸ்டாலின் குமார் கதிரவன் பிரபாகரன் முன்னாள் எம்.எல்.ஏ ராஜ்குமார்,உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு முடிவுகளை வெளியிட்டவுடன் வேட்புமனு அளித்துள்ளவர்களுக்கு வெற்றி வாய்ப்பின் அடிப்படையில் தொகுதிகளை இறுதி செய்யும் பணிகளில் திமுக ஈடுபடும் எனத்தெரிகிறது.
Error 403 The request cannot be completed because you have exceeded your quota. : quotaExceeded
Comments are closed, but trackbacks and pingbacks are open.