தமிழ்நாடு வருவாய் நிர்வாக ஆணையராக பதவி வகித்து வந்த எஸ்.கே.பிரபாகர் ஐஏஎஸ், டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார் . இவர் பொறுப்பேற்கும் நாளில் இருந்து 6 ஆண்டுகள் இந்த பதவியில் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி தலைவராக முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபுவின் பெயரை தமிழக அரசு பரிந்துரைத்திருந்தது. ஆனால், ஆளுநர் ஆர்.என். ரவி, டிஎன்பிஎஸ்சி தலைவர் நியமனத்தில் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலை தமிழக அரசு பின்பற்றவில்லை என்று கோப்புகளை திருப்பி அனுப்பினார். இதையடுத்து, உரிய கோப்புகளுடன் தமிழக அரசு சைலேந்திரபாபுவை மீண்டும் பரிந்துரைத்தது. ஆனாலும், அந்த பரிந்துரையை ஏற்க ஆளுநர் முன் வராமல் இருந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், தற்போது டிஎன்பிஎஸ்சி தலைவராக பிரபாகர் நியமிக்கப்பட்டுள்ளார். எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது, தமிழக உள்துறை செயலாளராக எஸ்கே பிரபாகர் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments are closed.