திருச்சி எம்.பி திருநாவுக்கரசருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்க கூடாது என்கிற கோரிக்கை மனுவினை, அவரது கட்சியினராலே, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வ பெருந்தகையிடம் வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் மாநில தலைவரை சந்தித்த திருச்சி காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மேற்சொன்ன கோரிக்கையை மனுவாக வழங்கினார்கள். மேலும் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் ஜோசப் லூயிஸ் அடைக்கல் ராஜை திருச்சி காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்க, அகில இந்திய காங்கிரஸ் தலைமையிடம் வலியுறுத்த வேண்டும் என்கிற கோரிக்கையும் அந்த மனுவில் இடம்பெற்றிருந்த்து. இந்நிகழ்வின் போது திருச்சி மாநகர காங்கிரஸ் துணை தலைவர் வில்ஸ்.முத்துக்குமார் , மாநகர செயலாளர் முகமது அலி, முன்னாள் கோட்டத் தலைவர் ஓவியர் கஸ்பார் மாவட்ட துணை தலைவர் சந்தானகிருஷ்ணன், வார்டு தலைவர் நடராஜ், கார்த்தி பவுல்ராஜ் மீனவராஜா மற்றும் திருச்சி ஏ.எஸ்.சார்லஸ் உள்ளிட்ட ஏராளமானோர் உடனிருந்தனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.