திருச்சி விமான நிலையத்தில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் – விமான நிலைய கழிவறை அருகே கேட்பாரற்று கிடந்த பையில் இருந்து தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள்
திருச்சி விமான நிலையத்திற்கு சிங்கப்பூர், மலேசியா, துபாய் இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து தினம் தோறும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு வெளிநாடுகளிலிருந்து வருபவர்களில் சிலர் பணத்திற்கு ஆசைப்பட்டு தங்க கடத்தலில் ஈடுபட்டு வருகின்றனர். இதைத்தடுக்க விமான பயணிகளைவான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் பரிசோதிப்பது வழக்கம். அந்த வகையில் இன்றும் ( மார்ச் -08 ) வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் வெளிநாடுகளில் இருந்து விமானத்தில் வந்த பயணிகளை சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்பொழுது விமான நிலைய கழிவறை அருகே ஒரு பை நீண்டநேரமாக கிடப்பதாக விமான நிலைய ஊழியர்கள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் பேரில் அதிகாரிகள் அங்கு சென்று அந்த பையை சோதனை செய்த போது அதில் சுமார் 1.5 கிலோ மதிப்பிலான பேஸ்ட் வடிவிலான தங்கம் இருந்துள்ளது. இதனையடுத்து அதிகாரிகள் தங்கத்தை கைப்பற்றியதோடு,அந்தப் பையை எடுத்து வந்தது யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, இலங்கையிலிருந்து விமானம் மூலம் திருச்சா வந்த பயணி ஒருவர் தங்கத்தை கடத்திவந்து டாய்லெட் அருகே பையில் மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர் யாரிடம் தங்கத்தை கொடுக்க வந்தார் என்பது குறித்து வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ஒரு கோடி ரூபாய் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.