Rock Fort Times
Online News

மாநகராட்சிகளில் காலிமனை வரி வசூலில் தீவிரம் காட்டுங்க – நகராட்சி நிர்வாகத்துறை இயக்குனர் சுற்றறிக்கை…

தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சிகளிலும் காலிமனை வரி வசூலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்து நகராட்சி நிர்வாகத்துறை இயக்குனர் எஸ்.சிவராசு வெளியிட்டுள்ள அறிக்கையில்., 2023-ம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் விதிகள் 266 (1) பிரிவில், விவசாய நிலங்களை தவிர, பிற காலிமனைகளுக்கும் சொத்து வரி நிர்ணயம் செய்ய வேண்டும். மேலும் 266 (2) பிரிவின் கீழ், கட்டிடம் கட்டப்பட்டுள்ள அளவீட்டை போல் 2 மடங்குக்கு மேல் இருந்தால் அந்த காலி நிலத்துக்கு உரிய விதிமுறையை பயன்படுத்தி காலிமனை வரி விதிப்பு செய்ய வேண்டும். இதேபோல் 2022- ம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் திருத்த சட்டம் 97-ம் பிரிவு மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு விதிகள் 259 (1) (இ) பிரிவின் கீழ் விடுபட்ட வரியினங்களுக்கு குறிப்பிட்ட நடப்பு அரையாண்டை தவிர்த்து, முன்னுள்ள 12 அரையாண்டுகள் அல்லது 6 ஆண்டுகளுக்கு சொத்து வரியை விதிக்க வேண்டும். தமிழகத்தில் பெரும்பாலான மாநகராட்சிகளின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காலிமனைக ளுக்கு வரி விதிக்காமல் நிதி இழப்பு ஏற்படுவதாக தெரிகிறது. எனவே காலிமனை வரிவிதிப்பு செய்யும் வழிமுறைகளை மாநகராட்சி கமிஷனர்கள் கடைபிடிக்க வேண்டும். மனைபிரிவு அங்கீகாரம், அடுக்குமாடி குடியிருப்பு, வணிக வளாக கட்டிடங்களுக்கு அனுமதிகோரி உள்ளூர் திட்ட குழுமத்துக்கு விண்ணப்பங்கள் பெறும் போது, நிலத்தின் குறிப்பிட்ட பகுதிகளை மட்டும் அளவீடு செய்து காலிமனை வரி விதிக்கப்படாமல் நில உரிமைதாரருக்கு சொந்தமாக இருக்கும் மொத்த நிலப்பரப்புக்கும் 97 மற்றும் 259 (1) (இ) பிரிவின் கீழ் தெரிவித்துள்ளபடி, நடப்பு அரையாண்டுக்கு முன்னர் 12 அரையாண்டுகளுக்கு காலிமனை நிலவரி விதிக்க வேண்டும். விதிகளின் படி காலிமனை வரிவிதிப்பு செய்த, நிலுவையின்றி காலிமனை வரி செலுத்திய பின்னரே உள்ளூர் திட்டக்குழமத்தில் விண்ணப்பம் வைக்க பரிந்துரைக்க வேண்டும். கட்டிட உரிமம் நீட்டிப்பு கோரி பெறப்படும் விண்ணப்பங்களுக்கு நடப்பு அரையாண்டு வரையிலான காலிமனை வரி முழுமையாக செலுத்திய பின்னரே உரிமத்தை நீட்டிப்பு செய்ய பரிந்துரை செய்ய வேண்டும். மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள காலி மனைகளை பத்திரப்பதிவு செய்ய வருபவர்களிடம் காலிமனை வரிவிதிப்பு செய்துரசீது பெற்ற பின்னர் பத்திரப்பதிவு செய்ய பதிவுத்துறை அலுவலகங்களுக்கு அறிவுறுத்தல் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

🔴: ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் திருப்பவித்ரோத்ஸவம் 6-ம் திருநாள்

1 of 850

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்