Rock Fort Times
Online News

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிய நீதிபதிகள் நியமனம்: முதல்வர் விஜய் வாழ்த்து…!

சென்னை உயர் நீதிமன்றத்திற்கு கூடுதல் நீதிபதிகளாக தர்மலிங்கம் லிங்கேஸ்வரன், பாலதண்டாயுதம், கார்த்திகேயன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தமிழ்நாடு முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “மாண்பமை சென்னை உயர் நீதிமன்றத்திற்கு கூடுதல் நீதிபதிகளாக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தர்மலிங்கம் லிங்கேஸ்வரன், பாலதண்டாயுதம், கார்த்திகேயன் ஆகியோருக்கு
எனது மனமார்ந்த வாழ்த்துகள். நீதியின் மாண்பையும், அரசியலமைப்பின் விழுமியங்களையும் பாதுகாக்கும் வகையில், நீதித்துறையின் மிக உயர்ந்த மரபையும், கண்ணியத்தையும் கொண்ட சென்னை உயர் நீதிமன்றத்தில் பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றுள்ள தங்களின் பணி சிறக்கட்டும்” என்று அதில் அவர் கூறியுள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்