நாடாளுமன்ற தேர்தல் முடிவுக்கு பிறகு சீமான் கட்சியை கலைத்து விடுவார்- மத்திய இணை அமைச்சர் எல். முருகன்…!
மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை இணை அமைச்சர் எல்.முருகன் திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்ய நாமக்கல்லில் இருந்து சாலை மார்க்கமாக வருகை தந்தார். அப்போது அவருக்கு ஸ்ரீரங்கம் ரெங்கா…ரெங்கா…கோபுரத்தில் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் அவர், பேட்டரி கார் மூலம் கருடாழ்வார் சன்னதியில் தரிசனம் செய்துவிட்டு பெருமாளை தரிசனம் செய்தார். இதனை தொடர்ந்து நடந்தே சென்று ரெங்க நாச்சியாரை தரிசனம் செய்தார். பின்னர் கம்பர் மண்டபத்தில் ஐந்து நிமிடம் அமர்ந்தார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், பிரதமர் மோடி 400 தொகுதிகளுக்கு மேல் வென்று, மூன்றாம் முறையாக பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டு வரலாற்று சாதனை படைக்க உள்ளார். இந்த தேர்தல் மூலம் தமிழகத்தில் ஒரு அரசியல் புரட்சி ஏற்பட உள்ளது. இந்தியா கூட்டணி வெற்றி பெறுவது உறுதி என ஸ்டாலின் கூறுவது அவர் பகல் கனவு காண்கிறார் என்பதை உறுதி படுத்துகிறது. காங்கிரஸ் 40 தொகுதிகளில் கூட வெற்றி பெறாது. திமுக மிகப்பெரிய தோல்வியை தழுவும். மோடி கூறியதை திரித்துக் கூறுவது தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு அழகல்ல.
மோடி என்ன பேசினார் என்பதை முழுமையாக தெரிந்து கொண்டு பேச வேண்டும். பொய் பேசுவது முதல்வருக்கு அழகல்ல என்றார். நாம் தமிழர் கட்சியை விட பாஜக அதிக வாக்குகள் பெற்றால் கட்சியை கலைத்து விடுவதாக சீமான் கூறியுள்ளாரே? என்ற கேள்விக்கு, நாடாளுமன்றத் தேர்தல் முடிவுக்குப் பிறகு
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கட்சியை கலைத்து விடுவார் என்றார்.
Comments are closed.