Rock Fort Times
Online News

குடும்ப தகராறில் விபரீத முடிவு: 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு தாயும் தற்கொலை…!

சேலம் மாவட்டம் சங்ககிரியை அடுத்துள்ள புள்ளாக்கவுண்டம்பட்டி அக்ரஹாரம் ஊராட்சி வினோபாஜி நகர் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் கோகுல் (30). அதே பகுதியைச் சேர்ந்த ஷில்பா (எ) சுகமதி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சஞ்சனாஸ்ரீ (6), ரிஷ்மிகா (2) என்ற இரண்டு பெண் குழந்தைகள். இந்நிலையில் கணவன்- மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால், இருவரும் கடந்த 15 நாட்களாக பேசிக்கொள்ளாமல் இருந்து வந்ததாகவும் தெரிகிறது. குடும்ப பிரச்சினை காரணமாக மன உளைச்சலில் இருந்து வந்த சுகமதி, தான் பெற்ற இரண்டு பெண் குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து கொன்று விட்டு தானும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த தேவூர் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 3 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து குடும்ப பிரச்சினை காரணமாக சுகமதி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர். 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Error 403 The request cannot be completed because you have exceeded your quota. : quotaExceeded

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்