தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அருகே குலைக்கநாதபுரத்தில் கட்டையன் பெருமாள் சாமி கோவில் கொடை விழா நடந்து வருகிறது. இவ்விழாவிற்கு வெளியூரில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்துள்ளனர். இந்நிலையில், கோவிலுக்கு வந்த வாலிபர்கள் சிலர் திருச்செந்தூர் – நெல்லை சாலையில் பைக் ரேசில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. சிலர் தாறுமாறாக பைக்கை ஓட்டிச் சென்றனர். அப்போது குலைக்கநாதபுரத்தில் எதிர்பாராதவிதமாக 2 மோட்டார் சைக்கிள்கள் பயங்கரமாக மோதிக்கொண்டன. இதில், குலைக்கநாதபுரத்தைச் சேர்ந்த ஞானம் மகன் ஜீவா என்ற ஜீவரத்தினம் (22), செந்தூர்பாண்டி மகன் பிரதீப்குமார் (23) ஆகிய 2 பேரும் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், இவர்களுடன் பைக் சாகசத்தில் ஈடுபட்ட 17 வயது சிறுவனும் படுகாயமடைந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். பைக்குகள் மோதி உயிரிழந்த 2 பேரும் ஆறுமுகநேரியில் லோடு ஆட்டோ டிரைவர்களாக வேலை பார்த்து வந்துள்ளனர். இச்சம்பவத்தால் குலைக்கநாதபுரம் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.
Comments are closed.