திருச்சியில் 11 வயது சிறுமிக்கு, சிறுவா்கள் சிலா் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனை செல்போனில் வீடியோவாகவும் பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர், போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் விசாரணை நடத்திய பொன்மலை மகளிர் போலீசார் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 7 பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் அனைவரும் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் என்பது தெரிய வந்தது. பின்னர் அவர்களை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.