Rock Fort Times
Online News

திருச்சியில், நாடகத் தந்தை சங்கரதாஸ் சுவாமிகள் ஜெயந்தி விழா…* சிறந்த கலைஞர்களுக்கு பாராட்டு..!

‘சம்ஸ்கார் பாரதி’ திருச்சிராப்பள்ளி சார்பில் நாடகத் தந்தை சங்கரதாஸ் சுவாமிகள் ஜெயந்தி விழா திருவரங்கம் அரங்கன் அரங்கத்தில் கடந்த 04.10.2026 அன்று மாலை 6 மணியளவில் சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கு சம்ஸ்கார் பாரதி’ திருச்சிராப்பள்ளி தலைவர் தேவி ராஜு தலைமை வகித்தார்.
மேலாண்மை நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் (CEO) கபிலன் ராமராஜன் தலைமை மற்றும் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றார். எம்.பி. ஸ்ரீ காமாட்சி இறைவணக்கம் நிகழ்த்தினார். தொடர்ந்து குத்துவிளக்கேற்றுதல் நடைபெற்றது. ஹம்சினி, ஹர்ஷிதா ஆகியோர் த்யேய கீத பாடினர். ஸ்ரீ ராஜராஜேஸ்வரி வரவேற்புரை வழங்கினார். தொடர்ந்து சஞ்சனா மீனாட்சி விக்னேசின் இசைச் சொற்பொழிவு நடைபெற்றது. மயூர் நாட்டியாலயா சார்பில் நடைபெற்ற வள்ளித் திருமணம் நாட்டிய நாடகம் பார்வையாளர்களைக் கவர்ந்தது. விஜயஸ்ரீ மித்ரா மற்றும் கவிதா நவநீதகிருஷ்ணன் ஆகியோரின் அபங்கம் இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து சம்ஸ்கார் பாரதி லோக் கலா குழுவினரின் நவீன வள்ளித் திருமணம், மேலூர் குழந்தைகளின் கோலாட்டம் ஆகிய கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும், சங்கரதாஸ் சுவாமிகளின் வாழ்க்கை, நாடகப் பங்களிப்பு மற்றும் தமிழ்நாடக வளர்ச்சியில் அவரது சிறப்பான பங்கு”குறித்து உரையாடல் நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வாக சிறப்பு விருந்தினர் கபிலன் ராமராஜன் கௌரவிக்கப்பட்டார். அவரை சம்ஸ்கார் பாரதி செயலாளர் மித்ரா கௌரவித்தார். மேலும், “கலைமாமணி காஷ்யப் மகேசை ‘கலைமாமணி’ ரேவதி முத்துசுவாமி கௌரவித்தார். “லால்குடி த. முருகானந்தத்தை ரசிக ரஞ்சன சபாவின் கௌரவ செயலாளர் என்.சேகர் கௌரவித்தார்.
வளரும் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு கலைத்துறைகளைச் சேர்ந்த கலைஞர்களுக்கு ஊக்கத்
தொகையும், பாராட்டும் வழங்கப்பட்டது. பாரம்பரிய கலை களுக்காக ஒதுவார் ரூபாவதி, மேடைக் கலைகளுக்காக ஜோதிகா, மக்கள் கலைக்காக வேல் முருகன், காட்சிக்
கலைக்காக பூரண லட்சுமி, இலக்கியத்திற்காக நித்யா ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர். தொடர்ந்து சிறப்பு விருந்தினர் உரையாற்றினார். விழாவில் பங்கேற்ற கலைஞர்கள் மற்றும் பங்களிப்பாளர்களுக்கு நினைவுப் பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. ஜெயா ஸ்ரீதர் நன்றி உரையாற்றினார். இறுதியாக பெருந்தேவி வந்தே மாதரம் நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெற்றது.
தமிழ் நாடக உலகின் முன்னோடியான சங்கரதாஸ் சுவாமிகளின் கலைப்பணியை நினைவு கூர்வதோடு பாரம்பரிய மற்றும் வளரும் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையிலும் இவ்விழா அமைந்தது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்