Rock Fort Times
Online News

சந்திரயான்-3 விண்கலத்தில் சேலம் உருக்காலை இரும்பு: பாராட்டு சான்று அனுப்பியது இஸ்ரோ…

சந்திரயான்-3 விண்கலத்தின் இன்ஜின், எரிபொருள் டேங்க் பகுதியை பாதுகாக்கும் கவசமாக சேலம் உருக்காலையில் உற்பத்தி செய்யப்பட்ட இரும்பு பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக சேலம் உருக்காலை நிர்வாக இயக்குனருக்கு இஸ்ரோ நிர்வாகம் பாராட்டு சான்றிதழ் அனுப்பியுள்ளது. இஸ்ரோவின் ஸ்ரீஹரிகோட்டா மையத்தில் இருந்து சந்திரயான்-3 விண்கலம் எல்விஎம்-3 எம் 4 ராக்கெட் மூலம் கடந்த 14-ம் தேதி மதியம் 2-35 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. அது, வெற்றிகரமாக பூமியின் சுற்று வட்டப்பாதைக்கு சென்றது.

அங்கிருந்து சந்திரனை நோக்கிய பயணத்திற்காக விண்கலத்தின் அடுத்தடுத்த நகர்வுகளை விஞ்ஞானிகள் மேற்கொண்டு வருகின்றனர். எல்விஎம்-3 எம்4 ராக்கெட் விண்கலத்தை நிலவை நோக்கி பயணிக்கச் செய்யும் செயல்முறை வரும் ஆகஸ்ட் 1ம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 1 மணி வரை மேற்கொள்ளப்பட இருக்கிறது. அதை தொடர்ந்து குறிப்பிட்ட வட்டப்பாதையில் இருந்து நிலவின் மேற்பரப்பில் ஆகஸ்ட் 23ம் தேதி விண்கலம் தரையிறங்கும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இந்த சந்திரயான்-3 விண்கலத்தில் சேலம் உருக்காலையில் தயாரிக்கப்பட்ட இரும்பு பயணிக்கிறது. அந்த இரும்பு சந்திரனில் இறங்கி தனது வெற்றித்தடத்தை பதிக்க இருக்கிறது. சந்திரயான்-3 விண்கல தயாரிப்புக்கு உறுதுணையாக இருந்த நிறுவனங்களுக்கு இஸ்ரோ நன்றி தெரிவித்து, பாராட்டு சான்றுகளை அளித்து வருகிறது. அந்த வகையில், சேலம் உருக்காலை நிர்வாக இயக்குனர் வி.கே.பாண்டேவுக்கு இஸ்ரோவின் பொருட்கள் மற்றும் உற்பத்தி பிரிவு துணை இயக்குநர் மருதாச்சலம் பாராட்டு சான்றிதழை அனுப்பியுள்ளார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்