Rock Fort Times
Online News

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.42 லட்சம் மோசடி:- தனியார் பள்ளி ஆசிரியரை தாக்கிய ரெயில்வே டிக்கெட் பரிசோதகர் மீது வழக்கு…!

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் சின்னமுக்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் முத்து (வயது 48). இவர் தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரிடம், திருச்சி மேலகல்கண்டார் கோட்டை பகுதியை சேர்ந்த ரெயில்வே டிக்கெட் பரிசோதகர் மோகன்ராஜ் அறிமுகமாகி அரசு வேலை வாங்கி வருவதாக கூறி முத்துவிடம் ரூ.42 லட்சத்தை வாங்கிக் கொண்டு வேலை வாங்கி தராமல் ஏமாற்றியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக நீதிமன்றத்தில் முத்து வழக்கு தொடர்ந்துள்ளார். இந்தநிலையில் திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையம் அருகே வந்த முத்துவை, ரெயில்வே டிக்கெட் பரிசோதகர் சந்தித்து பேசி உள்ளார். அப்போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டு
முத்துவை, மோகன்ராஜ் கீழே தள்ளி தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த முத்து, திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து கண்டோன்மென்ட் போலீசில் முத்து கொடுத்த புகாரின்பேரில் போலீசார் ரெயில்வே டிக்கெட் பரிசோதகர் மோகன்ராஜ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்