Rock Fort Times
Online News

ரூ.400 கோடி மோசடி வழக்கு: கத்தாரில் இருந்து விமானத்தில் திருச்சி வந்தவரை மடக்கியது பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை…!

தஞ்சாவூர் அருகே ரஹ்மான் நகரை சேர்ந்தவர் கமாலுதீன். இவர் ராஹத் டிரான்ஸ்போர்ட் என்கிற பெயரில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார். இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக ஆசை வார்த்தைகளை அள்ளி வீசியுள்ளார். இதனை நம்பிய 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அதிகளவு பணத்தை முதலீடு செய்துள்ளனர். அந்தவகையில் 400 கோடிக்கு மேல் பணம் குவிந்தது. ஆனால், கமாலுதீன் முதலீட்டாளர்களுக்கு பணத்தை திருப்பி கொடுக்காமல் ஏமாற்றியதாக கூறப்படுகிறது. இதனால், பாதிக்கப்பட்ட 6 ஆயிரத்துக்கும் அதிகமான முதலீட்டாளர்கள் போலீசில் புகார் அளித்தனர். அந்த புகார்களின் அடிப்படையில் திருச்சி மாவட்ட பொருளாதார குற்றப் பிரிவு போலீசார் 2021-ம் ஆண்டில் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே பலர் கைது செய்யப்பட்டனர். கமாலுதீன் 2021-ம் ஆண்டில் காலமானார். இந்த வழக்கு தொடர்பாக தேடப்பட்டு வந்த கமாலுதீனின் மைத்துனர் சுஹைல் அகமது (36) வெளிநாட்டில் தலைமறைவாக இருந்து வந்தார். இந்நிலையில், சுத்தார் நாட்டிலிருந்து திருச்சி விமான நிலையத்துக்கு வந்த அவரை திருச்சி பொருளாதார குற்றப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளர் டி.கே.லில்லிகிரேஸ் தலைமையிலான போலீசார் கைது செய்து, மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்