Rock Fort Times
Online News

காரில் ரகசிய அறை அமைத்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.150 கோடி போதைப்பொருள் பறிமுதல்- “ரூட்” போட்டுக் கொடுத்தவருக்கு வலை…!

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் இருந்து இலங்கைக்கு பல கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள் கடத்த இருப்பதாக நாகை க்யூ பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, வேளாங்கண்ணி ஆரிய நாட்டு தெருவில் உள்ள ஒரு தனியார் விடுதியில் ஆய்வாளர் ராமச்சந்திர பூபதி தலைமையிலான க்யூ பிரிவு போலீஸார் சம்பவத்தன்று இரவு தீவிர சோதனை நடத்தினர். விடுதியில் ஓர் அறையில் தங்கியிருந்த 2 பேரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்தனர்.  விசாரணையில், விடுதியில் இருந்த இருவரும் மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டம் கியாபரி பகுதியை சேர்ந்த தில்குமார் தாபாமங்கர்(34) கவாஸ்(36) என்பதும், அவர்கள் மேற்கு வங்கத்தில் இருந்து ராமேசுவரம் வழியாக இலங்கைக்கு ஹசீஸ் என்ற போதைப் பொருளை கடத்த திட்டமிட்டு இருந்தது தெரியவந்தது. இதற்காக காரில் ரகசிய அறை அமைத்து 75 கிலோ ஹசீஸ் போதைப் பொருளை மறைத்து வைத்துக்கொண்டு, மேற்கு வங்கத்தில் இருந்து புறப்பட்டு வந்துள்ளனர். காரில் 1,500 கி.மீ. தூரத்துக்கு மேல் பயணம் செய்ததால், வேளாங்கண்ணியில் அறை எடுத்து தங்கிவிட்டு ராமேசுவரம் சென்று அங்கிருந்து படகு மூலம் போதைப் பொருளை இலங்கைக்கு கடத்த திட்டமிட்டு இருந்ததும் தெரிய வந்தது.  அவர்கள் 2 பேரையும் க்யூ பிரிவு போலீஸார் கைது செய்தனர். காரில் ரகசிய அறை அமைத்து பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 75 கிலோ போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் சர்வதேச மதிப்பு ரூ.150 கோடி ஆகும். தேனி மாவட்டத்தை சேர்ந்த ஒருவர்தான் இவர்களுக்கு செல்போன் வழியாக ரூட் மேப் போட்டு கொடுத்துள்ளார். அவரை பிடிக்க தஞ்சையில் இருந்து போலீஸார் தேனி விரைந்துள்ளனர்.  அவர் சிக்கினால் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.
*

🔴ஸ்ரீரங்கம் ஸ்ரீரெங்கநாச்சியார் ஊஞ்சல் திருநாள் (டோலோத்சவம்) || 3ம் நாள் || சிறப்பு தொகுப்பு ||

1 of 901

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்