டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி முறைகேடு: அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜி விலக வேண்டும்…* பா.ஜ.க.மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம்!
டாஸ்மாக்கில், ரூ.1000 கோடி முறைகேடு நடந்திருப்பதாக அமலாக்கத் துறை சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. இதுதொடர்பாக திருச்சியில் பா.ஜ.க.மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஏற்கனவே ஒரு மது பாட்டிலுக்கு பத்து ரூபாய் ஏற்றி பெற்ற செந்தில்பாலாஜி தற்போது ரூ.30 வரை உயர்த்தி வாங்கி உள்ளார். கூடுதல் விலையின் பணம் யாருக்கு செல்கிறது. நிர்வாகத்தின் கீழ் நடக்கும் குறைபாடுகள் என காரணம் கூறும் செந்தில்பாலாஜி அமைச்சர் பதவியை விட்டு விலக வேண்டும். ரூபாய் நோட்டுக்கான அதிகாரப்பூர்வ சிம்பலை தமிழில் காட்டுவதன் மூலம் மட்டுமே தமிழை வளர்த்து விட முடியுமா? . அப்படி என்றால் பாரத பிரதமர் நரேந்திர மோடி அனைத்து நாடுகளுக்கும் செல்லும்போது தமிழ் மொழியின் முக்கியத்துவத்தை பற்றி பேசுகிறார். அப்போது அந்த நாடுகளில் எல்லாம் தமிழ் வளர்ந்து விடுமா?. ரூபாய் நோட்டு இந்தியா முழுவதும் பயன்படுத்தக்கூடியது. அந்த ரூபாய் நோட்டு சிம்பல் ஆனது திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினரின் மகன் உருவாக்கியது. இதனை அன்றைய தினம் கலைஞர் கருணாநிதி மற்றும் நிதி அமைச்சர் பாராட்டி இருக்கிறார்கள். இன்றைக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் ஊழல் பிரச்சனையை மக்களிடையே திசை திருப்ப வேண்டும் என்பதற்காக ரூபாய் சிம்பலை மாற்றி நாடகத்தை நடத்தி வருகிறார் என கூறினார். பேட்டியின் போது நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
Comments are closed.