Rock Fort Times
Online News

ரூ.100 கோடி மோசடி புகார்: முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மீது வழக்கு பதிவு…!

கடந்த திமுக ஆட்சியில் தனியார் பள்ளிகளுக்கு அனுமதி பெற்று தருவதாக கூறி 100 கோடி ரூபாய் மோசடி செய்ததாக தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கத்தின் தலைவர் பி.டி.அரசகுமார் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதுதொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் இன்று (செப்டம்பர் 16) காலை முதல் முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தொடர்புடைய திருச்சி மற்றும் சென்னை உள்ளிட்ட 6 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக போலீசார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தனியார் பள்ளி நிர்வாகங்களிடம் அரசு அனுமதி பெற்று தருவதாக கூறி பணம் பெற்று மோசடி செய்தது தொடர்பான வழக்கில் சென்னை மற்றும் திருச்சியிலுள்ள இடங்களில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் மூலம் சோதனை நடைபெற்று வருகிறது. இதுவரை, 177 பாதிக்கப்பட்ட தனியார் பள்ளிகளிடம் பல கோடி ரூபாய் தொகை வசூலிக்கப்பட்டு நம்பிக்கை மோசடி செய்ததாக முதற்கட்டமாக தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக நடத்தப்பட்ட சோதனைகளின்போது, குற்றச்செயலுடன் தொடர்புடைய ஆவணங்கள், தனியார் பள்ளிகள் தொடர்பான பதிவுகள், அரசு அலுவலகங்களுக்கு அளிக்கப்பட்ட மனுக்கள்/பிரதிநிதித்துவ ஆவணங்கள், நிதி தொடர்பான பதிவுகள், கைபேசிகள், கணினிகள், ஹார்டு டிஸ்க்குகள் மற்றும் இதர டிஜிட்டல்/மின்னணு ஆதாரங்கள் விசாரணைக்காக கைப்பற்றப்பட்டு, தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வழக்கின் விசாரணையின் தொடர்ச்சியாக, சாட்சிகளின் வாக்கு மூலங்கள். ஆவணங்கள், மின்னணு ஆதாரங்கள் மற்றும் அரசு ஆவணங்களின் அடிப்படையில், அப்போதைய பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஊழல் மற்றும் நம்பிக்கை மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டு, இவர் மீது ஊழல் தடுப்பு சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவருக்கு சொந்தமாக சென்னை மற்றும் திருச்சியிலுள்ள மொத்தம் 4 இடங்களிலும், இவரது உதவியாளரான வாளாடி கார்த்திக் என்பவருக்கு சொந்தமான சென்னை மற்றும் திருச்சி 2 இடங்களிலும் இன்று (16.09.2026) காலை முதல் ஒரே நேரத்தில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்