Rock Fort Times
Online News

தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்கியதில் லஞ்சம் பெற்றதாக புகார்: முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வீட்டில் ரெய்டு…!

கடந்த திமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக இருந்தவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் தொகுதியில் இரண்டு முறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட அவருக்கு பள்ளிக்கல்வித் துறை பொறுப்பு வழங்கப்பட்டது. நடந்து முடிந்த 2026 சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக்கழக வேட்பாளரிடம் தோல்வியைத் தழுவினார். அவர் கல்வித்துறை அமைச்சராக இருந்தபோது தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்குவதில் லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது. இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இல்லத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. திருச்சி, தென்னூர் அண்ணா நகரில் உள்ள அன்பில் மகேஸ் இல்லத்தில் தற்பொழுது சோதனை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி மட்டுமில்லாமல் சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் மகேஷுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்