திருச்சி திருவானைக்காவல் மணல்மேடு பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மகள் சத்யா (வயது 27) கடந்த 2000ம் ஆண்டு சத்யாவின் தந்தை முருகனை திருவானைக்காவல் மேலகொண்டையம் பேட்டை வடக்கு தெருவை சேர்ந்த சரவணன் என்பவரது மகன் சச்சிதானந்தம் (வயது 25) என்பவர் கொலை செய்துவிட்டார். இந்த வழக்கு திருச்சி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் தந்தை கொலை வழக்கில் நீதிமன்றத்தில் சாட்சி சொல்ல வரக்கூடாது என்று சத்யாவை கத்தியைச் காட்டி மிரட்டி உள்ளார். இது குறித்து சத்யா திருவரங்கம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து சச்சிதானந்தனை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சச்சிதானந்தம் ரவுடி பட்டியலில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.