கொடநாடு வழக்கில் உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்க கோரி ஓபிஎஸ் அணி சார்பில் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் அருகே நாளை ( 01.08.2023 ) ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இது குறித்து அமைப்பு செயலாளரும், திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன் மற்றும் புறநகர் மாவட்ட செயலாளர்கள் எண்டப்புளி ராஜ்மோகன், சாமிகண்ணு, ரத்தினவேல் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காட்டிய வழியில் ஒருங்கிணைப்பாளர், முன்னாள் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர், முன்னாள் அமைச்சர்,
ஆர்.வைத்திலிங்கம் எம்எல்ஏ ஆகியோரின் ஆணைக்கிணங்க, நாளை ( 01. 08.2023 ) காலை 10.30 மணி அளவில் திருச்சி ஜங்ஷன் வழிவிடு வேல்முருகன் கோவில் அருகில் (காதிகிராப்ட் அருகில்) துணை ஒருங்கிணைப்பாளர் கு.ப.கிருஷ்ணன், கழக அமைப்புச் செயலாளரும், மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன், புறநகர் மாவட்ட செயலாளர்கள் எண்டப்புளி ராஜ்மோகன், சாமிகண்ணு, ரத்தினவேல் ஆகியோர் தலைமையில்
கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் உண்மையான குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடிக்க தி.மு.க. அரசை வலியுறுத்தி கண்டன ஆர்பாட்டம் நடத்தப்பட உள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் அனைத்து பிரிவு நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் திரளாக கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம் என அந்த அறிக்கையில் கூறியுள்ளனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.