Rock Fort Times
Online News

வறண்டு கிடக்கும் விளை நிலங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்…

விவசாய சங்க தலைவர் வலியுறுத்தல்..

திருச்சியில், தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மேகதாது அணை கட்ட பிரதமரை வலியுறுத்த கர்நாடக அனைத்து கட்சியினர் முடிவெடுத்துள்ள நிலையில் தமிழகத்தில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டாமலும், கர்நாடகத்திற்கு கண்டனம் கூட முதல்வர் தெரிவிக்காமல் இருப்பது வேதனை அளிக்கிறது. காவிரி டெல்டா பகுதிகளில் விவசாய நிலங்கள் வறண்டு கிடக்கிறது. இதனை கணக்கீடு செய்து விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். மறுக்கும் பட்சத்தில் அனைத்து விவசாய சங்கங்கள் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளை ஒருங்கிணைத்து வரும் பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு எதிராக களம் இறங்குவோம். இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்