Rock Fort Times
Online News

என்கவுண்டர் செய்ய திட்டமிடுவதாக உறவினர்கள் மறியல்: வாலிபரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய போலீசார்…!

திருச்சி மாவட்டம், கோப்பு பகுதியை சேர்ந்தவர் நாகராஜன்(28). இவர் மீது ஜீயபுரம் காவல் நிலையத்தில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளது. அந்த வழக்குகள் தொடர்பாக விசாரணை நடத்த அவரை போலீசார் அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.  ஆனால், இரண்டு நாட்கள் ஆகியும் அவரைப் பற்றி எந்த தகவலும் தெரியவில்லை.  இதுகுறித்து  நாகராஜின் மனைவி பிரேமா மற்றும் உறவினர்கள் கேட்டபோது போலீசார் முறையான பதில் அளிக்கவில்லை என்று  சொல்லப்படுகிறது.  இதனால், ஆத்திரம் அடைந்த நாகராஜின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள்  திருச்சி காஜாமலை ரோட்டில் உள்ள மாவட்ட கலெக்டர் பங்களாவுக்கு திரண்டு வந்து நாகராஜை போலீசார் அழைத்துச் சென்று என்கவுண்டர் செய்ய திட்டமிடுவதாகவும்,

அவரை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர்.  அவர்களிடம்,  ஏடிஎஸ்பி கோடிலிங்கம் தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில்  நாகராஜ், பயங்கர ஆயுதங்களுடன் சுற்றி திரிந்ததாக அவரை கைது செய்த ஜீயபுரம் போலீசார், திருச்சி குற்றவியல் நீதிமன்றம் எண் மூன்றில் ஆஜர்படுத்தி நீதிபதி உத்தரவின்பேரில் சிறையில் அடைத்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்