கிருஷ்ணகிரி மாவட்டம் நவாப் நகர் பகுதியைச் சேர்ந்தவர் வேலவன். ரத்த வங்கி நடத்தி வரும் இவருக்கு சொந்தமான நிலம் ஓசூரில் உள்ளது. இந்த நிலப் பிரச்சனை தொடர்பாக அப்போதைய கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு ஒருவரின் உதவியை வேலவன் நாடியுள்ளார். அப்போது அவர், தனக்கு உதவுவது போன்று அந்த நிலத்தை அவரது சகோதரர் பெயருக்கு மாற்றி மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இந்த மோசடியில் ஈடுபட்ட போலீஸ் அதிகாரி தற்போது திருச்சி மாநகரில் உயர் அதிகாரியாக உள்ளார். இந்தநிலையில் திருச்சிக்கு வந்த வேலவன், கலெக்டர் அலுவலகம் முன் தனது கார் மீது அமர்ந்து போலீஸ் அதிகாரியை கைது செய்ய வலியுறுத்தியும், நிலத்தை மீட்டுத் தரக் கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த போலீசார் அனுமதியின்றி கார் மீது ஏறி போராட்டம் நடத்திய வேலவனை பிடித்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.