மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருச்சி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் நடத்தின. இதில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி கல்லூரிகளில் பயின்ற முன்னாள் மாணவர்கள் கலந்துகொண்டு பயன் பெற்றனர். இம்முகாமில் 150- க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்றன. முகாமை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார். மாநகராட்சி மேயர் அன்பழகன், மாவட்ட கலெக்டர் மா.பிரதீப்குமார் ஐஏஎஸ் மற்றும் மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முகாமில், கலெக்டர் பிரதீப்குமார் பேசுகையில், ஏதோ ஒரு வேலை கிடைத்தால் போதும் என்று இல்லாமல் உங்களுக்கென்று ஒரு குறிக்கோளை வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் வேலை எப்படி இருக்க வேண்டும் என்று இகிகை என்ற ஒரு புத்தகத்தில் அழகாக சொல்லப்பட்டுள்ளது. உங்களது பணி உலகத்திற்கு பயன்படக்கூடியதாகவும், அதிலிருந்து வருமானம் கிடைப்பது போன்ற வகையிலும் இருத்தல் வேண்டும்” என்றார். இந்த முகாமில் வேலை பெற்ற அனைவருக்கும் வேலைக்கான ஆணைகளை அமைச்சர் கே.என். நேரு வழங்கினார்.


Comments are closed, but trackbacks and pingbacks are open.