Rock Fort Times
Online News

திருச்சி சிறப்பு முகாமில், ஜன்னல் கம்பிகளை வளைத்து தப்பிய கைதி பிடிபட்டார்…!

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் வெளிநாட்டு கைதிகளுக்கான சிறப்பு முகாமும் செயல்பட்டு வருகிறது.  இந்த முகாமில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய வெளிநாட்டை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டுள்ளனர்.  அவர்களில்  அப்துல் ரியாஸ் கானும் ஒருவர்.  இவர், கடந்த மாதம் 22ம் தேதி தான் தங்கி இருந்த அறையின் ஜன்னல் கம்பிகளை வளைத்து அதன் வழியாக கீழே குதித்து தப்பி ஓடிவிட்டார்.  கைதி தப்பி ஓடிய சம்பவம் திருச்சி காவல்துறை வட்டாரத்தில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.  அவரை  ராமேஸ்வரம், கோவை, புதுக்கோட்டை,  நாகை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போலீசார் தீவிரமாக தேடினர்.  இந்நிலையில் அவர் ராமேஸ்வரம் செல்வதற்காக திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் அருகே பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.  அதன் அடிப்படையில் அங்கு சென்ற போலீசார், ஜங்ஷன் பகுதியில் பதுங்கி இருந்த அப்துல் ரியாஸ்கானை கைது செய்தனர். பின்னர் அவரை திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சென்னை புழல் சிறையில் அடைக்க போலீஸ் வாகனத்தில் அழைத்து சென்றனர்.
இதேபோல,  கடந்த 2021ம் ஆண்டு சிறப்பு முகாமில் இருந்து தப்பிய பல்கேரியா நாட்டை சேர்ந்த கைதி இதுவரை பிடிபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்