சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 219 -வது நினைவு நாளை முன்னிட்டு திருச்சி கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலக வளாகத்தில் உள்ள அவரது உருவ சிலைக்கு, திருச்சி மத்திய மாவட்ட திமுக செயலாளர் வைரமணி, மேயர் அன்பழகன் ஆகியோர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சேர்மன் துரைராஜ், பகுதி செயலாளர்கள் காஜாமலை விஜய், மோகன்தாஸ், இளங்கோ, நாகராஜன், திருச்சி மண்டல தொ.மு.ச. பொதுச்செயலாளர் குணசேகரன், கவுன்சிலர்கள் விஜயா ஜெயராஜ், ஜெ.கலைச்செல்வி, ராமதாஸ், வட்ட செயலாளர் மூவேந்திரன், வட்ட பொருளாளர் பந்தல் எஸ்.ராமு, மிளகு பாறை சிவா, முத்துப்பழனி, சதீஷ்குமார், பரமசிவம், தஸ்தகீர் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
Comments are closed.