Rock Fort Times
Online News

பிரதமர் மோடி வருகிற 19ம் தேதி திருப்பூர் வருகை: இ.எஸ்.ஐ.மருத்துவ மனையை திறந்து வைக்கிறார்..

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா மற்றும் சர்வதேச விமான நிலைய புதிய முனைய திறப்பு கடந்த 2ம் தேதி நடைபெற்றன.
விழாவில், பிரதமர் மோடி பங்கேற்று மாணவ- மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி விழா பேருரை ஆற்றினார். மேலும், திருச்சி விமான நிலைய புதிய முனையத்தை திறந்து வைத்து பேசினார். இந்தநிலையில், பிரதமர் நரேந்திர மோடி வருகிற 19-ம் தேதி மீண்டும் தமிழ்நாடு வருகிறார். அவர், திருப்பூரில் கட்டப்பட்டுள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கிறார். பின்னர், திருப்பூரில் நடைபெற உள்ள பாஜக பொதுக்கூட்டத்திலும் பங்கேற்கிறார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்