பிரதமர் நரேந்திர மோடி வருகிற 20 ஆம் தேதி
அரங்கநாதர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்கிறார்.
இதற்காக தனி விமானம் மூலம் திருச்சி வரும் அவர், திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ஸ்ரீரங்கம் பஞ்சகரை ஹெலிகாப்டர் தளத்திற்கு வருகிறார். அங்கிருந்து கார் மூலம் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார்.
அவரது வருகையை முன்னிட்டு நூற்றுக்கணக்கான போலீசார் ஸ்ரீரங்கம் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், பிரதமர் பாதுகாப்பு காரணங்களுக்காகவும் பிரதமர் செல்லும் வழியில் சுமார் 500 மீட்டர் சுற்றளவுக்கு கார் உள்ளிட்ட வாகனங்களை அனுமதிக்க கூடாது என பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
எனவே,
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலை சுற்றியுள்ள
சித்திரை வீதி,
உத்தர வீதிகளில் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
அப்பகுதியில் வசிக்கும் கார் உரிமையாளர்கள், தங்கள் வாகனங்களை சாலைகளில் நிறுத்தி இருந்தால் அவற்றை உடனடியாக கார் பார்க்கிங் ஏரியாவில் நிறுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அது மட்டுமல்லாது அந்த வீதிகளில் உள்ள கடைகள் அனைத்தும் 2 நாட்கள் மூட திருச்சி மாநகர காவல் துறை உத்தரவிட்டதை தொடர்ந்து கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி வருகையால் ஸ்ரீரங்கம் முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டில் உள்ளது என்றே கூறலாம்
Error: Contact form not found.
.
Comments are closed, but trackbacks and pingbacks are open.