Rock Fort Times
Online News

ஸ்ரீரங்கத்தில் ‘ரோடு ஷோ’ நடத்திய பிரதமர் மோடி- பொதுமக்களை பார்த்து கையசைத்தார்..!

மூன்று நாள் பயணமாக தமிழகம் வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி நேற்று சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில்’கேலோ இந்தியா’ விளையாட்டுப் போட்டியை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து தமிழக ஆளுநர் மாளிகையில் இரவு தங்கிய அவர், ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக இன்று(20-01-2024) தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்தை வந்தடைந்தார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்ட அவர் ஸ்ரீரங்கம் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த ஹெலிகாப்டர் தளத்தில் இறங்கி கார் மூலம் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்றார் .

அப்போது அவரை வரவேற்க சாலையின் இருபுறமும் பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டு நின்றிருந்தனர்.பொதுமக்களை பார்த்ததும் உற்சாகமடைந்த பிரதமர் நரேந்திர மோடி, கார் கதவுகளை திறந்தபடி நின்று பொதுமக்களை பார்த்து கை அசைத்தபடியே சென்றார். இதனைப்பார்த்து உற்சாகமடைந்த பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பதிலுக்கு தங்களது கைகளை உயர்த்தி மகிழ்ச்சியை தெரிவித்தனர்.

🔴: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் || ஸ்ரீரெங்கநாச்சியார் நவராத்திரி பெருவிழா 6-ம் திருநாள்

1 of 872

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்