Rock Fort Times
Online News

திருச்சி மாவட்டம், முசிறியில் ஓய்வு பெற்ற மின்வாரிய அதிகாரி வீட்டில் நகைகள்- பணம் திருட்டு… * மறைவான இடத்தில் வைத்ததால் 15 பவுன் நகைகள் தப்பின..!

திருச்சி மாவட்டம், முசிறி முருகுவிநாயகர் தெருவில் வசிப்பவர் சுப்பிரமணியன் ( வயது 67). ஓய்வுபெற்ற மின்வாரிய அதிகாரி. இவரது மனைவி ஜானகி. இவர்களுக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். சுப்பிரமணியன் மகன் காரைக்காலில் வானிலை ஆராய்ச்சி மையத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சுப்பிரமணியன் தனது மனைவி ஜானகியுடன் தீபாவளி பண்டிகைக்காக காரைக்காலில் வசிக்கும் மகன் வீட்டிற்கு கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு சென்றிருந்தார். இந்த நிலையில் இன்று(11-11-2026) மதியம் அருகில் இருந்தவர்கள் இவரது வீட்டின் கதவுகள் நீண்டநேரமாக திறந்து கிடப்பதையும், வீட்டின் பூட்டுகள் உடைக்கப்பட்டு இருந்தது கண்டும் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து சுப்பிரமணியனுக்கும், முசிறி காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் முசிறி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது வீட்டின் முன்பக்க கேட் மற்றும் கதவுகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டு
இருந்தன. உள்ளே சென்று பார்த்தபோது மர்ம நபர்கள் பீரோவை உடைத்து அதில் வைக்கப்பட்டிருந்த பணம், வெள்ளி நகைகளை திருடி சென்றனர். இது குறித்து காரைக்காலில் உள்ள சுப்பிரமணியத்திடம் போனில் போலீசார் விபரங்கள் கேட்டதில் ஒரு லட்சம் மதிப்பிலான வெள்ளி பொருட்கள், ரூ15 ஆயிரம் பணம், ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள புதிய ஸ்கூட்டர் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிசென்றது தெரிய வந்தது. இந்தநிலையில் சுப்ரமணியன் வெளியூர் செல்வதற்கு முன்பாக சுமார் 15 பவுன் தங்க நகைகளையும், 80 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை வீட்டின் பீரோவில் மறைவான இடத்தில் வைத்து விட்டு சென்றதால் நகைகள் மற்றும் பணம் திருடர்களின் கையில் சிக்காமல் தப்பி உள்ளது. இந்த திருட்டு சம்பவம் குறித்து முசிறி போலீசார் வழக்குபதிந்து இதில் ஈடுபட்ட
மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்