தமிழ்நாடு தொடக்ககல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு திருச்சி மாவட்டம் (டிட்டோஜேக் ) சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே இன்று(27-01-2024) உண்ணாவிரதம் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநில துணை பொதுச்செயலாளர் நாகராஜன், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாவட்ட செயலாளர் பொன்னுச்சாமி, தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் அந்தோணி எட்வர்ட் ராஜ் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் சந்திரசேகரன், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் செல்வகுமார், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் ஆரோக்கியராஜ், ஜே.எஸ்.ஆர். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயற்குழு உறுப்பினர் கலியபெருமாள் அனைவரையும் வரவேற்று பேசினார். உண்ணாவிரதத்தை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொருளாளர் மற்றும் டிட்டோஜேக் ஒருங்கிணைப்பாளர் நீலகண்டன் தொடங்கி வைத்து பேசினார். தொடக்க கல்வித்துறையில் பணிபுரியக்கூடிய
90 சதவீத ஆசிரியர்களின் பதவி உயர்வை பறிக்கக்கூடிய மாநில முன்னுரிமையை வலியுறுத்தும் அரசாணை எண் 243- ஐ ரத்து செய்ய வேண்டும். தொடக்கக் கல்வித் துறை தொடர்பான ஆணைகளை உடனடியாக வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரத போராட்டம் நடந்தது. மாலை, தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி பொதுச் செயலாளர் முத்துசாமி உண்ணா விரதத்தை முடித்து வைத்தார். உண்ணாவிரதத்தில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.