திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் மாநகர் மாவட்ட மாணவரணி செயலாளர் இப்ராம்ஷா தலைமையில் மலைக்கோட்டை சரக்குபாறை அருகே நடைபெற்றது. இந்த கூட்டத்தில், சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சர் வைகைசெல்வன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
அப்போது அவர் பேசுகையில், இந்தியாவிலேயே மாநில அமைச்சர் ஒருவர் சிறையில் உள்ளார் என்றால் அது
திமுக ஆட்சியில் தான். அவரது அமைச்சர் பதவியை பறிக்காமல் திராவிட மாடல் என கூறி ஏமாற்றி வருகின்றனர். சென்னையில் வெள்ளம் வந்தபோது 4000 கோடிக்கு கணக்கு கேட்டால் மத்திய அரசு 5000 கோடி கொடுத்தால் பதில் சொல்கிறேன் என்கின்றனர். பிரதமர் மோடி திருக்குறளை பேசுகிறார், பாரதி விழாவை போற்றுகிறார் எல்லா இடங்களிலும் தமிழில் பேசுகிறார். ஶ்ரீரங்கம் வந்த பிரதமர் 3500 ஆண்டு கால தமிழை இந்திய ஆட்சி மொழி ஆக்க வேண்டும் என பேசினார் என்றார். கூட்டத்தில், திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளர் ஜெ.சீனிவாசன், அவைத் தலைவர் மலைக்கோட்டை ஐயப்பன், மாவட்ட துணைச் செயலாளர் வனிதா, மாநகர் மாவட்ட மகளிர் அணி செயலாளர் எம்.எஸ். நஜிமாபாரிக், பகுதி கழக செயலாளர் அன்பழகன், திருச்சி மாநகர் மாவட்ட மாணவர் அணி தலைவர்
K.P.S. கலியமூர்த்தி,
மாவட்ட துணைத் தலைவர்கள்
P. தினகரன்,
K.K. கார்த்திக்,
B.சேதுமாதவன்,
மாவட்ட இணைச் செயலாளர்கள்
R. செல்வக்குமார்,
R. வேல்முருகன்,
P. ரஜினிகாந்த்,
மாவட்ட துணைச் செயலாளர்கள்
T.K.S. ஹரிஹரன்,
M. மனோஜ்குமார்,
A.J. தினேஷ்,
B. தமிழ்வாணன்,
மாவட்ட பொருளாளர்
K.வணக்கம் , சோமு மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.