தேசப்பிதா காந்தியடிகளையும், சுதந்திரப் போராட்டத்தில் உயிர் நீத்த காங்கிரஸ் தியாகிகளையும் கொச்சைப்படுத்திய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் சிந்தாமணி அண்ணா சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநகர் மாவட்ட தலைவர் எல்.ரெக்ஸ் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்திற்கு திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சு.திருநாவுக்கரசர் தலைமை தாங்கி பேசுகையில், மோடி ஆண்டுக்கு இரண்டு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தருவதாக கூறினார். அப்படி என்றால் இந்த 10 ஆண்டுகளில் 20 கோடி பேருக்கு வேலை கொடுத்து இருக்க வேண்டும். அதை செய்தாரா?. வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்று பேசினார். ஆர்ப்பாட்டத்தில், மாநில சிறுபான்மை பிரிவு துணைத் தலைவர் இன்ஜினியர் பேட்டரி ராஜ்குமார், நாடாளுமன்ற மேலிட பொறுப்பாளர் பென்னட் அந்தோணி ராஜ், முன்னாள் ராணுவ வீரர் பிரிவு ராஜேந்திரன்,
கோட்டை காங்கிரஸ் தலைவர்கள் ராஜா டேனியல்ராய், பிரியங்கா பட்டேல், வெங்கடேஷ் காந்தி, ஐடி பிரிவு லோகேஸ்வரன், அரிசிகடை டேவிட் யுவன், பட்டேல், சேவா தளம் முரளி, ஓபிசி அணி தர்கா தளபதி பகதூர்ஷா மற்றும் திரளான கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
1
of 900
Comments are closed, but trackbacks and pingbacks are open.