Rock Fort Times
Online News

திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி, மருங்காபுரி பகுதிகளில் 3-ம் தேதி மின்தடை…!

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சி, மருங்காபுரி பகுதிகளில் 03.12.2024 (செவ்வாய்க்கிழமை) மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி துணை மின் நிலையத்தில்  டிசம்பர் 3ம் தேதி பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் காரணமாக துவரங்குறிச்சி, அழகாபுரி, அக்கியம்பட்டி, நாட்டார்பட்டி, அதிகாரம், சடவேலாம்பட்டி, உசிலம்பட்டி, ஆலம்பட்டி, இக்கரைகோசிக்குறிச்சி, செவந்தாம்பட்டி, தெத்தூர், செவல்பட்டி பிடாரப்பட்டி, வெங்கட்நாயக்கன் பட்டி, அடைக்கம்பட்டி, நல்லூர், பில்லுப்பட்டி, யாகபுரம், கல்லுப்பட்டி, பொருவாய், வேளங்குறிச்சி, மருங்காபுரி, காரைப்பட்டி, கரடிப்பட்டி, கஞ்சநாயக்கன்பட்டி, சிங்கிலிப்பட்டி, எம்.இடையப்பட்டி மற்றும் பழையபாளையம் ஆகிய பகுதிகளில் அன்றைய தினம் காலை 09.45 முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது என மணப்பாறை மின்வாரிய செயற்பொறியாளர் (பொறுப்பு) பொ.பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்