Rock Fort Times
Online News

திருச்சி, டிவிஎஸ் டோல்கேட்டில் பவர் குரூப் புதிய அலுவலகம்- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்…!

திருச்சி, டிவிஎஸ் டோல்கேட்டில் பவர் குரூப் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் புதிய நிர்வாக அலுவலகம் திறப்பு விழா இன்று(11-07-2024) சிறப்பாக நடைபெற்றது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்ட( மேற்கு) செயலாளர் புல்லட் லாரன்ஸ், மாநகர் மாவட்ட செயலாளர் (கிழக்கு) ஆ. கனியமுதன் ஆகியோர் தலைமை தாங்கினர். திருச்சி, கரூர் மண்டல செயலாளர் அ.க.தமிழாதன், திருச்சி நாடாளுமன்ற தொகுதி செயலாளர் வழக்கறிஞர் ஜெ. தங்கதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருச்சி மாநகர பொறுப்பாளரும், பவர் குரூப் நிர்வாக இயக்குனருமான  ஏ.அப்துல்காதர் அனைவரையும் வரவேற்றார்.   இதில், சிறப்பு அழைப்பாளராக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி புதிய அலுவலகத்தை திறந்து வைத்தார்.  விழாவில், புறநகர் மாவட்ட செயலாளர் (வடக்கு) வழக்கறிஞர் முசிறி கலைச்செல்வன், புறநகர் மாவட்ட செயலாளர் (தெற்கு) சி.சக்தி ஆற்றலரசு, இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறையின் மாநில துணை செயலாளர் கா.அரசு, இஸ்லாமிய ஜனநாயக பேரவையின் மாநில செயலாளர் அப்துல் ரகுமான், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மாநில அமைப்பு செயலாளருமான அப்துல்நாசர் மற்றும் சண்முகராஜ், அப்துல் ரஹீம், தேசிங்குராஜா, ஜெய்லாபுதீன் மற்றும் கட்சி நிர்வாகிகள், உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டனர்.

நாட்டுக்கு நல்லது சொல்லும் || சிறப்பான‌ மேடைப் பேச்சு...

1 of 940

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்