இந்திய நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடக்கின்றன. தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் மற்றும் 102 தொகுதிகளில் முதல் கட்டமாக நாளை(19-04-2024) வாக்குப்பதிவு நடக்கிறது. இந்த தொகுதிகளில் நேற்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது. நாளை வாக்குப்பதிவு நடைபெறுவதால் இன்று தேர்தல் தொடர்பான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன. வாக்குப்பதிவு நாளை நடப்பதையொட்டி, ஓட்டுச்சாவடிகள் முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளன. தேர்தல் பாதுகாப்பு பணியில், 1.90 லட்சம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்களில், கர்நாடகா, ஆந்திரா மற்றும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த 10,000 போலீசார் உள்ளனர். அவர்களுடன், துணை ராணுவ படையினர், ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் மற்றும் ஊர் காவல் படையினரும் உள்ளனர். வாக்காளர்கள் அச்சமின்றி ஓட்டளிக்க கொடி அணிவகுப்பும் நடத்தினர். தொகுதிகளுக்கு தொடர்பு இல்லாத நபர்களை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தனியார் தங்கும் விடுதிகள் மற்றும் தீவிர வாகன சோதனையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.