திருச்சி தென்னூர் மின்வாரிய அலுவலகம் அருகே உள்ள ஒருஅடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் வசித்து வந்தவர் சந்திவாலா. இவரது மகன் சௌமிக் வாலா (வயது 17). இவர், அண்ணாமலை நகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்- 2 படித்து வந்தார். இந்த நிலையில் சந்திவாலா கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு திடீரென இறந்து விட்டார். அதன் பின்னர் தாயாரின் பராமரிப்பில் சௌமிக் வாலா இருந்தார். இந்தநிலையில் அந்த மாணவனின் தாயார் ஒருவரை
2- வது திருமணம் செய்து கொண்டார். இதை அறிந்த சௌமிக் வாலா கடும் அதிர்ச்சி அடைந்தார். இதனால், மன உளைச்சலுக்கு தள்ளப்பட்ட சௌமிக் வாலா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தில்லை நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Now Playing
Now Playing
Now Playing
Now Playing
Now Playing
Now Playing
1
of 968
Comments are closed.