Rock Fort Times
Online News

அனைத்துத் துறைகளிலும் பின்னோக்கிச் செல்லும் தமிழக அரசு? முதல்வர் விஜய்யை விமர்சித்த மு.க.ஸ்டாலின்..!

திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், தமிழக அரசின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் தமிழகத்தின் ஜிஎஸ்டி வருவாய் வளர்ச்சி தேசிய சராசரியைவிடக் குறைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், தமிழகத்திற்கு வர வேண்டிய ரூ.1,614 கோடி மதிப்பிலான கொரிய முதலீடுகள் ஆந்திராவுக்குச் சென்றுவிட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்ப்பதில் முக்கியப் பங்காற்றிய வழிகாட்டி தமிழ்நாடு அமைப்பின் செயல்பாடுகள் குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளார். அனைத்துத் துறைகளிலும் இவ்வளவு வேகமாகப் பின்னோக்கிச் செல்வது எப்படி என விமர்சித்துள்ள மு.க.ஸ்டாலின், ஆட்சியின் செயல்பாடுகள் குறித்த புரிதல் இல்லாமல் முதலமைச்சர் விஜய் செயல்படுவதாகவும், இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் கையசைத்து விளம்பரம் தேடுவதில் கவனம் செலுத்துவதாகவும் தனது பதிவில் சாடியுள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்