ஆந்திராவை நெருங்கும் முரசு புயலால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைச் சமாளிக்க, தமிழக முதல்வர் விஜய்யிடம் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உதவி கோரியுள்ளார். ஏற்கனவே அர்னாப் புயலால் ஆந்திராவில் ரூ.4,000 கோடிக்கும் மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், தற்போது உருவாகியுள்ள முரசு புயலால் மேலும் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, புயல் பாதிப்புகளைக் குறைக்க ஆந்திர அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தமிழக முதல்வர் விஜய்யைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசிய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, பலத்த காற்றால் மின்கம்பங்கள் சாய்ந்து மின் விநியோகக் கட்டமைப்புகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின் விநியோகக் கட்டமைப்புகளை விரைந்து சீரமைக்க, தமிழகத்திலிருந்து மின்துறைப் பணியாளர்கள் மற்றும் தேவையான இயந்திரங்களை அனுப்பி உதவுமாறு கோரிக்கை விடுத்துள்ளார். இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட தமிழக முதல்வர் விஜய், மின் கட்டமைப்புகளைச் சீரமைக்கத் தேவையான உதவிகளைச் செய்து தருவதாக உறுதியளித்துள்ளார். இந்தத் தகவலை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Comments are closed.