Rock Fort Times
Online News

எம்.எல்.ஏ.க்களுக்கு வாகனங்கள், உதவியாளர்கள் வைத்துக்கொள்ள அனுமதி…* முதல்வர் விஜய் அறிவிப்பு…!

தமிழக சட்டப்பேரவையில் இன்று(19-08-2026) 110 விதியின் கீழ் முதல்வர் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், சட்டமன்ற உறுப்பினர்கள், தங்கள் பயண தேவைக்களுக்காக பிறரை சார்ந்து இருப்பதை தவிர்க்கவும், தங்கள் தொகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளவும் வாகனங்கள் வழங்கப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். மேலும் கார் ஓட்டுநர் மற்றும் பராமரிப்பு செலவுகளுக்காக மாதந்தோறும் ரூ75000 வழங்கப்படும் என்றும், சட்டமன்ற உறுப்பினர்களின் உதவியாளர்களுக்கு ரூ25000 வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன், விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏ. ஜோதிமணி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வாகனம் வேண்டும் என கோரிக்கை வைத்த நிலையில் நடப்பு சட்டமன்ற தொடரிலேயே இது தொடர்பான அறிவிப்பை முதலமைச்சர் வெளியிட்டுள்ளார் . முதலமைச்சரின் அறிவிப்பை தொடர்ந்து உறுப்பினர்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர். விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏ. ஜோதிமணி
பேசுகையில், எனது கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றிக் கொடுத்த முதலமைச்சருக்கு நன்றி என தெரிவித்தார். அமைச்சர் ஷாஜகான்: முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றி. எம்எல்ஏ காமராஜ்: முதலமைச்சர் கொடுக்கும் காரில்தான் செல்வதே கெத்து. பாமக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் முதலமைச்சரின் அறிவிப்பை வரவேற்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்