Rock Fort Times
Online News

கலெக்டர் மட்டும் வேலை பார்த்தா போதுமா?- திருச்சி மாவட்ட ஆய்வுக்கூட்டத்தில் அதிகாரிகளுக்கு “டோஸ்”…!

திருச்சி மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் எம்.பி துரை வைகோ தலைமையில் நேற்று (நவம்பர் – 26) கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மாவட்ட கலெக்டர் பிரதீக் தயாள், திருவெறும்பூர் எம்.எல்ஏ நவல்பட்டு விஜி, மணப்பாறை எம்.எல்.ஏ கதிரவன்,போலீஸ் எஸ்.பி டோங்கரே பிரவீன் உமேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். மத்திய மற்றும் மாநில அரசின் திட்டங்கள் செயல்படுத்தைப்படுவதையும், நடைமுறையில் உள்ள திட்டங்களின் தற்போதைய நிலையை அறிந்து கொள்வதுமே இந்த ஆய்வுக்கூட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள் குறித்த தகவல்கள் கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகளிடம் கேட்கப்பட்டுள்ளது.ஓயாமரி சுடுகாட்டை மாநகராட்சி நிர்வாகமே நடத்துவதில் ஏன் தாமதம்?, அரியமங்கலம் மின் மயானத்தில் ஏற்பட்டுள்ள பழுது, மன்னார்புரம் – பஞ்சப்பூர் இடையே மின் விளக்குகள் அமைப்பது, திண்டுக்கல் சாலையில் சர்வீஸ் ரோடு ஏற்படுத்துவது, திருவெறும்பூர், துவாக்குடியில் பேருந்து நிலையங்கள் அமைப்பதன் தற்போதைய நிலை,
மேல சிந்தாமணி ஆற்றுப்பாலம் போன்ற 32 முக்கியமான விஷயங்கள் விவாதிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதில் பெரும்பாலான கேள்விகளுக்கு பதில் தெரியாமல்
அதிகாரிகள் திருதிருவென முழித்துள்ளனர்.
இதனால் அதிருப்தியடைந்த எம்.எல்ஏக்கள், மாவட்ட அளவிலான ஆய்வுக் கூட்டத்திற்கு ஏனோ தானோ என வருவீர்களா?, ஏன் பொறுப்பில்லாமல் பதில் சொல்கிறீர்கள்?, அதிமுக மற்றும் திமுக ஆட்சியில் இப்படி நடந்துகொள்ள முடியுமா? தமிழக வெற்றிக்கழகம் ஆட்சிக்கு வந்து ஆறு மாதம் ஆகிவிட்டது. ஆனால் திருச்சி மாவட்டத்தில் எந்த புது திட்டங்களையும் செயல்டுத்தவில்லை.இதனால் ஆட்சிக்குத்தான் கெட்டப்பெயர். திருச்சி மாவட்டத்தில் கலெக்டர் மட்டுமே வேலை பார்க்கிறார். மற்றவர்கள் பெயரளவில் மட்டுமே பணி செய்கிறீர்கள். குறிப்பாக ஊரக வளர்ச்சித்துறையின் செயல்பாடு மோசமாக இருக்கிறது. எனவே கவனமுடன் செயல்படுங்கள் என கூட்டத்தில் கலந்துகொண்ட அதிகாரிகளில் சிலருக்கு டோஸ் விடப்பட்டுள்ளது.
இதனால் மாவட்ட அலுவலர்கள் தற்போது உதறலில் உள்ளனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்