திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு அண்ணா நகர் பகுதியில் காவலர் பயிற்சி பள்ளி உள்ளது. இங்கு, சப் இன்ஸ்பெக்டராகவும், சட்ட ஆலோசகர் ஆகவும் ஜான்கென்னடி என்பவர் வேலை பார்த்து வருகிறார். திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த இவர், 1988 ஆம் ஆண்டு காவலராக பணியில் சேர்ந்துள்ளார். இந்த காவலர் பயிற்சி பள்ளியில் டிஎஸ்பி மணவாளன் துணை முதல்வராகவும், இன்ஸ்பெக்டர் சுகுணா முதன்மை சட்ட ஆலோசகராகவும் உள்ளனர்.
இந்நிலையில், சப்-இன்ஸ்பெக்டர் ஜான்கென்னடி பேசி வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதில், தனக்கு மருத்துவ விடுப்பு தராமல் இழுத்தடிப்பதால் தனது சாவுக்கு காரணமாகி விடாதீர்கள் என கண்ணீருடன் பேசி உள்ளார். இந்த வீடியோ காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.