Rock Fort Times
Online News

தெலுங்கானாவில் அமோக வெற்றி: திருச்சியில் காங்கிரஸ் கட்சியினர் கொண்டாட்டம்…

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் சமீபத்தில் நடந்தன. இதில், தெலுங்கானாவில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்று வருகிறது. இதனை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் எல்.ரெக்ஸ் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

             

வெற்றி கொண்டாட்டத்தில் வக்கீல் சந்திரன், மாநில செயலாளர் ஜி.கே.முரளி, கோட்டத்தலைவர் பிரியங்கா பட்டேல், மகிளா காங்கிரஸ் தலைவர் ஷீலா செலஸ் , இளைஞர் காங்கிரஸ் மணிவேல் அண்ணாதுரை , மனித உரிமை பிரிவு ஜெயம் கோபி, ஐடி மற்றும் மீடியா அணி லோகேஸ்வரன், விஜய் பட்டேல், டேவிட், கலைபிரிவு ராகவேந்திரா , தெற்கு மாவட்ட துணை தலைவர் எழிலரசன், ஓபிசி அணி தர்கா தளபதி பகதூர்ஷா , நூர் அகமது மாவட்ட நிர்வாகிகள் எஸ்.வி.பட்டேல், கே.டி. பொன்னன் , வண்ணை அன்பழகன் , வண்ணை கணேசன் , சத்தியநாதன் ,செல்வரங்கராஜன் ,ராமன் , உறந்தை செல்வம், மார்க்கெட் சம்சு, மலர் வெங்கடேஷ் , யுவன் , கே.கே.சி பிரிவு செந்தில்குமார், வார்டு தலைவர்கள் தியாகராஜன், விஜய்பக்தன் , ஜாபர்சாதிக் , அம்ஜித், ரமேஷ் , மோகன் , இருதயராஜ் , சங்கரன் , வீரமணி, மகிளா நிர்வாகிகள் கோகிலா, ரேணுகா , நித்யா, ஸ்டெல்லா , விஜயா, ரோசிமணி , சசிகலா , சாந்தி , மாரீஸ்வரி, கன்டோன்மெண்ட் வளன்ரோஸ், குமரேசன் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர் .

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்