Rock Fort Times
Online News

‘டெட்’ தேர்வில் இருந்து விலக்களிக்க கோரி தமிழக சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் நிறைவேற்றம்…!

ஆசிரியர்கள் கட்டாயம் ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) தேர்ச்சி பெற வேண்டும் என்ற உத்தரவிலிருந்து விலக்களிக்கக் கோரி, தமிழக சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், இத்தனித்தீர்மானத்தை முன்மொழிந்து பேசுகையில், ஆசிரியர்கள் அனைவரும் கட்டாயம் டெட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற உத்தரவால் சுமார் 3.28 லட்சம் ஆசிரியர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுட்டிக்காட்டினார். இந்த தனித்தீர்மானத்திற்கு திமுக, அதிமுக, காங்கிரஸ், பாமக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் தங்களது முழு ஆதரவைத் தெரிவித்தன. அனைத்துக் கட்சி உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவைத் தொடர்ந்து, டெட் தேர்வு விலக்கு கோரும் தனித்தீர்மானம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்