நாடாளுமன்ற திறப்பு விழாவை எதிர்க்கட்சிகள் புறக்கணிக்க கூடாது…
மத்திய நிதி அமைச்சர் சீதாராமன் வேண்டுகோள்..
நாடாளுமன்ற புதிய கட்டிடத்தில் செங்கோல் நிறுவுவதில் எந்த அரசியலும் இல்லை, இந்த விழாவில் எதிர்க்கட்சிகள் பங்கேற்க வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கேட்டுக் கொண்டுள்ளார். இதுகுறித்து சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன், எல்.முருகன் மற்றும் கவர்னர்கள் ஆர்.என்.ரவி, தமிழிசை சௌந்தரராஜன், இல.கணேசன் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது நிர்மலா சீதாராமன் கூறியதாவது, 1947ஆம் ஆண்டு நாடு சுதந்திரமடைந்து ஆளுமை மாற்றத்தின்போது செங்கோல் முக்கிய பங்கு வகித்தது. அந்த செங்கோலை தயாரித்த இருவரும் உயிருடன் உள்ளதாகவும், அவர்களை பிரதமர் கவுரவிக்க உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், செங்கோலை நிறுவும் நிகழ்வில் தமிழ்நாட்டில் உள்ள 20 ஆதினங்கள் பங்கேற்க உள்ளனர். சபாநாயகரின் இருக்கைக்கு அருகே செங்கோல் வைக்கப்படுகிறது. செங்கோல் நிறுவுவதில் அரசியல் செய்வதற்கு எதுவும் இல்லை. நாடாளுமன்ற திறப்பு விழாவில் எதிர்க்கட்சிகள் கலந்து கொள்ள வேண்டும். ஜனாதிபதிக்கு உரிய மரியாதையை பிரதமர் கொடுத்துள்ளார். சத்தீஸ்கரின் சட்டப்பேரவையை சோனியா காந்தி திறந்து வைத்தார். கவர்னர் திறந்து வைக்கவில்லை என சுட்டிக்காட்டிய அவர், நாட்டிற்கு ஜனாதிபதியை போல, மாநிலத்திற்கு கவர்னர் தான் முக்கியம் எனவும் தெரிவித்தார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.