தமிழகத்தில் திட்டமிட்டப்படி 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை ஜூன் 1-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது. ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஸ் ஏற்கனவே அறிவித்திருந்தார்.ஆனால், எந்த வருடமும் இல்லாத அளவிற்கு தற்போது கோடை வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழல் உள்ளதால் பள்ளிகள் திறப்பு தள்ளி போகலாம் என தகவல் வெளியான நிலையில் பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த பேசிய அவர்; ஏற்கனவே திட்டமிட்டபடி தமிழ்நாடு முழுவதும் பள்ளிகள் அதே தேதியில் திறக்கப்படும். ஜூன் 1-ம் தேதி 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை திறக்கப்படும். ஜூன் 5ஆம் தேதி 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரிவித்தார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.