கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து, நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு குன்னூர் வழியாக பாரம்பரியம் மிக்க மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. தினமும் காலை மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு இந்த மலை ரயில் இயக்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக மேட்டுப்பாளையம் – குன்னூர் ரயில் பாதையில் கல்லாறு – ஹில் குரோவ் ரயில் நிலையங்களுக்கு இடையே மண்சரிவு ஏற்பட்டு, தண்டவாளத்தில் பாறைகளும், மரங்களும் சரிந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இதனால், மேட்டுப்பாளையம் – உதகை இடையே கடந்த 1-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டது. ரயில் பாதையில் சீரமைப்பு பணிகள் நிறைவடைந்ததால் 6-ம் தேதி மீண்டும் ரயில் சேவை தொடங்கியது. இந்நிலையில், கல்லாறு ஹில் குரோவ் இடையே தண்டவாளத்தின் பராமரிப்பு பணிக்காக இன்று ( ஆகஸ்ட்- 9 ) முதல் வரும் 15-ம் தேதி வரை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
Comments are closed.