Rock Fort Times
Online News

புதுக்கோட்டை சிப்காட் அருகே ரெயிலில் அடிபட்டு ஒருவர் பலி…!

புதுக்கோட்டை மாவட்டம், திருக்கட்டளை ஈவேரா பகுதியைச் சேர்ந்தவர் சிவராமன்.  இவரது மகன் பிரதீப்(39). இவர் புதுக்கோட்டை சிப்காட் எதிரே உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் இன்று காலை  7 மணி அளவில்   இறந்து கிடந்தார். அவ்வழியே சென்ற ஏதோ ஒரு ரெயிலில் அடிபட்டு அவர் இறந்தது தெரிய வந்தது . தகவல் அறிந்த திருச்சி ரெயில்வே போலீசார்  சம்பவ இடத்திற்கு  விரைந்து சென்று அந்த நபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  மேலும், இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து  அவர் தண்டவாளத்தை கடக்கும்போது ரயில் மோதி இறந்தாரா? அல்லது ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்