Rock Fort Times
Online News

மண்ணச்சநல்லூர் ஒன்றிய அலுவலகத்தில் 2 மாதங்களாக பயன்பாடற்று நிற்கும் புதிய வாகனங்கள்…!

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் ஒன்றியத்திற்குட்பட்ட 28 கிராமங்களில் தூய்மைப்பணிகளை மேற்கொள்ள வசதியாக 70 சதவிகித தூய்மை பாரத இயக்கநிதி மற்றும் 30 சதவிகித கிராம ஊராட்சி நிதியிலிருந்து எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க தமிழக ஊரக வளர்ச்சித்துறையின் அனுமதி கடந்த ஜனவரி மாதம் பெறப்பட்டது. அவற்றில் முதற்கட்டமாக கரியமாணிக்கம், அய்யம்பாளையம், ஆய்க்குடி, எதுமலை, இனாம் கல்பாளையம், இனாம் சமயபுரம், இருங்களூர், கொணலை, கூத்தூர், கோவத்தாக்குடி, மாதவபெருமாள்கோவில், பழையூர், பூனாம்பாளையம், சிறுகனூர், திருப்பைஞ்ஞீலி, திருவெள்ளரை, வலையூர் ஆகிய ஊராட்சிகளில் தூய்மைப்பணிகளை மேற்கொள்ள வசதியாக 18 எலெக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் 2 டிராக்டர்கள் ஆகியவை மண்ணச்சநல்லூர் ஒன்றியத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இவை  சம்பந்தப்பட்ட ஊராட்சிகளுக்கு வழங்கப்படாமல் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்திலேயே நிறுத்தப்பட்டிருக்கிறது.

எனவே அவற்றை அந்தந்த ஊராட்சிகளுக்கு வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுகுறித்து மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வட்டாரத்தில் விசாரித்தபோது.,

எலெக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்துவது குறித்த டெமோ மற்றும் வாகன ரெஜிஸ்ட்ரேஷன் போன்றவை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. இவை முடிந்தபின் அந்தந்த கிராம ஊராட்சிகளுக்கு வழங்கப்படும் என தெரிவித்தனர். மக்கள் வரிப்பணத்தில் வாங்கப்பட்ட வாகனங்களை, ஒரே இடத்தில் நிறுத்திவைத்து வீணடிக்காமல் தகுந்த நடவடிக்கை எடுத்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்